மத்தேயு (இயேசு கிறிஸ்துவின் போதனைகள் )
இயேசு கிறிஸ்துவின்
போதனைகள்
மத்தேயு
2. தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக . (மத் 4;7)
3. தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக. (மத் 4;10)
4. மனந்திரும்புங்கள் . ( மத் 4;17)
5. கொலை செய்யாதிருப்பாயாக. (மத் 5;21)
6. விபச்சாரம் செய்யதிருப்பாயாக . (மத் 5;27)
7. பொய்யாணையிடாதிருப்பாயாக . (மத் 5;33)
8. உள்ளதை உள்ளதென்றும் , இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் .(மத் 5;37)
9. தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம் . (மத் 5;39)
10. சத்துருக்களை சிநேகியுங்கள். (மத் 5;44)
11. சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள் . (மத் 5;44)
12. உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் . (மத் 5;44)
13. உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் , துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் . (மத் 5;44)
14. பூரண சற்குணராய் இருக்க கடவீர்கள்.(மத் 5;48)
15. மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக தர்மத்தை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் (மத் 6;1)
16. ஜெபம் பண்ணும்போது மாயக்காரரை போலிருக்க வேண்டாம் .
(மத் 6;5)
17. ஜெபம் பண்ணும்போது அறை வீட்டுக்குள் பிரவேசித்து கதவை பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு . (மத் 6;6)
18. மனுஷனுடைய தப்பிதங்களை மன்னியுங்கள் . (மத் 6;14)
19. உபவாசிக்கும் போது மாயக்காரரைப் போல முகவாடலாய் இராதேயுங்கள். (மத் 6;16)
20. பூமியிலே பொக்கிஷங்களை சேர்த்துவைக்க வேண்டாம் . (மத்6;19)
21. பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள் .(மத் 6;20)
22. என்னத்தை உண்போம் , என்னத்தை குடிப்போம் என்று உங்கள் ஜீவனத்துக்காகவும் , என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் .(மத் 6;25)
23. ஆகாயத்துப் பட்சிகளை கவனித்துப் பாருங்கள் .(மத் 6;26)
24. முதலாவது தேவனுடைய ராஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் .அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத் 6;33)
25.ஆகையால் நாளைக்காகக் கவலைப் படாதிருங்கள்; நாளைய தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும் ; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும். (மத் 6;34)
26.நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களை குற்றவாளிகளென்று தீர்க்கதிருங்கள் .(மத் 7;1)
27. உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப் போடு . பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய் .(மத் 7;5)
28. பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள் .(மத் 7;6)
29. உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் போடாதேயுங்கள் (மத்7;6)
31. கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் . தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள் . தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும் . (மத்7;7)
32. மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ அவைகளை நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள் .(மத்7;12)
33. இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள் .(மத்7;13)
34. கள்ளதீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள் .(மத்7;15)
35. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்யுங்கள். (மத்7;21)
36. அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள் . (மத்9;38)
37. பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள் . (மத்10;7)
38. வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம் பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள் , பிசாசுகளை துரத்துங்கள். (மத்10;8)
39. ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள் . (மத்10;12)
40. சர்ப்பங்களை போல வினவுள்ளவர்களும் புறாக்களை போல கபடற்றவர்களுமாய் இருங்கள். (மத்10;16)
41. மனுஷரை குறித்து எச்சரிக்கையாயிருங்கள் .(மத்10;17)
42. எப்படி பேசுவோம் என்றும் , என்னத்தை பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்.(மத்10;19)
43. ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல் , சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். (மத்10;28)
44. ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்10;28)
45. வீணான வார்த்தைகளை குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும். (மத்12;36)
46. திடன் கொள்ளுங்கள் .(மத்14;27)
47. தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக.(மத்15;4)
48. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாக போதிக்கிறவர்களை விட்டு விலகுங்கள் .(மத்15;14)
49. வாய்க்குள்ளே போகிறது மனுஷனை தீட்டுப்படுத்தாது . வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனை தீட்டுப்படுத்தும்.(மத்15;11)
50. புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.(மத்16;6)
51. ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னை தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றக்கடவன்.(மத்16;24)
52. கடுகளவு விசுவாசம் இருந்தால் உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது. (மத்17;20)
53. மனம் திருந்தி பிள்ளைகளைப் போலாக வேண்டும். (மத்18;3)
54. பிள்ளைகளை போல் உன்னைத் தாழ்த்து. (மத்18;4)
55. உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை தறித்து எறிந்து போடு. (மத்18;8)
56. உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை பிடுங்கி எறிந்து போடு. (மத்18;9)
57. சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் . (மத்18;10)
58. புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோட இசைந்திருப்பான் . அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். (மத்19;5)
59. தன் மனைவி வேசித்தனம் செய்ததினிமித்தமேயன்றி அவளை தள்ளிவிடக்கூடாது.(மத்19;8,9)
60. சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வர இடங்கொடுங்கள் அவர்களை தடை பண்ணாதிருங்கள் .(மத்19;14)
61. நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளை கைக்கொள். (மத்19;17)
62. உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக.(மத்19;19)
63. பூரண சற்குணராய் இருக்க விரும்பினால் போய் உனக்கு உண்டாயிருக்கிறவைகளை விற்று தரித்திரருக்குக் கொடு.(மத்19;21)
64. உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் பணிவிடைகாரனாயிருக்கக்கடவன். (மத்20;26)
65. உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால் அவன் ஊழியக்காரனாயிருக்கக்கடவன். (மத்20;27)
66. சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள் . (மத்21;21)
67. தகப்பனுடைய சித்தத்தின் படி செய்தவன் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பான். (மத்22;31)
68. இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள். (மத்22;21)
69. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக. (மத்22;37)
70. நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டு விடாதிருங்கள். (மத்23;22)
71. ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். (மத்24;4)
72. யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். (மத்24;6)
73. அநேகங் கள்ளதீர்கதரிசிகளும் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள். (மத்24;11)
74. அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்து போகும் . (மத்24;12)
75. முடிவுபரிந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான். (மத்24;13)
76. ராஜ்யத்தினுடைய இந்த சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும் , அப்போது முடிவு வரும். (மத்24;14)
77. இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். (மத்24;23)
78. மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். (மத்24;27)
79. நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும் . (மத்24;37)
80. உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையில் வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.(மத்24;42)
81. நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் .(மத்24;44)
82. கொஞ்சத்திலே உண்மையும் உத்தமுமாயிரு . (மத்25;23)
83. பசியாயிருப்பவர்களுக்கு போஜனம் கொடுக்கவேண்டும். (மத்25;35)
84. தாகமாயிருப்பவர்களுக்கு தாகம் தீர்க்கவேண்டும் . (மத்25;35)
85. அந்நியர்களை சேர்த்துக்கொள்ளவேண்டும் . (மத்25;35)
86. வஸ்திரமில்லாதவர்களுக்கு வஸ்திரம் கொடுக்க வேண்டும் . (மத்25;36)
87. வியாதியாயிருப்பவர்களை விசாரிக்க வேண்டும் . (மத்25;36)
88. காவலில் இருப்பவர்களை பார்க்கவேண்டும். (மத்25;36)
89. சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள் . (மத்26;41)
90. நீங்கள் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா குமரன் பரிசுத்தஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் .(மத்28;19)
91. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணுங்கள். (மத்28;20)
ஆமென்


Comments
Post a Comment