நாவு

நாவு




1,  பட்டயம்

     என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது, தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன், அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது. (சங் 57; 4)

2,  எழுத்தாணி

   என் இதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது, நான் ராஜாவைக் குறித்துப்பாடின கவியைச் சொல்லுகிறேன், என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி. (சங்45;1)

3,  வில்

   அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள், அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக் கொள்வது சத்தியத்துக்காக அல்ல , பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள், என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று  கர்த்தர் சொல்லுகிறார். ( எரே9;3)

4, சவரகன் கத்தி

     நீ கேடுகளைச் செய்ய எத்தனம் பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப் போல் இருக்கிறது. ( சங்52;2)

5, அம்பு

    அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது, அவனவன் தன் தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான். (எரே9; 8)

6, நெருப்பு

    நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம், நம்முடைய அவயவங்களில் நாவனது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக்  கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது.(யாக்3;6)

7, சாவுக்கேதுவான விஷம்

   நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது, அது அடங்காத பொல்லாங்குள்ளதும்  சாவுகேதுவன விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. (யாக்3;8)

 ##ஆரோக்கியமுள்ள    நாவு##

    ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம், நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். (நீதி 15;4) 
                                                     ஆமென் 

                                                                              



Comments