ஆறுதலின் தேவன்
தேவன் அருளிய ஆறுதல்களும், உம்மோடே சொல்லப்படுகிற மிருதுவான பேச்சும் உமக்கு அற்பகாரியமாயிருக்கிறதோ ? யோபு 15:11
1. சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல்
ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல் செய்தார். 2 கொரிந்தியர் 7:6
2. உபத்திரவப்படுகிறவர்களுக்கு ஆறுதல்
தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர். 2 கொரிந்தியர் 1:4
3. துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல்
கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், ஏசாயா 61:2
4.துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல்
அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன், அவர்களை நடத்தி,திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன். ஏசாயா 57:1
ஆமென்
Comments
Post a Comment