கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்.
மேலும் நான்
உங்களுக்குச்சொல்லுகிறதாவது;
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். (லூக்கா11;9 a)
ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான். ( லூக்கா11;10 a)
எதை கேட்க வேண்டும்?
1, பரிசுத்த ஆவியை கேட்க வேண்டும்.
பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். (லூக்கா11;13)
2, ஞானத்தைக் கேட்க வேண்டும்.
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தல் யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். (யாக்1;5)
3, தேவனாலே போதிக்கப்பட வேண்டும் என்று கேட்க வேண்டும்.
எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக் கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். (யோவான்6;45)
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (மத்தேயு7;11)
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் ஒருவன் செய்ய கண்டால், அவன் வேண்டுதல் செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக்கொடுப்பர். (1யோ 5;16 a)
6, கர்த்தாவே உமது வழியை எனக்குப் போதியும் என்று கேட்க வேண்டும்.
கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்யத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். ( சங் 86;11)
7, பிரகாசமுள்ளமனக்கண்களைக் கேட்க வேண்டும்.
தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமையின்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப்பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். (எபே1;19).
ஆமென்


Comments
Post a Comment